துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 41 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் ஹடே பகுதியில் இடிப்பாடுகளுக்குள் இருந்து 204 மணி நேரத்திற்கு பிறகு ஒரு பெண்ணும் ஆணும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதே பகுதியில் 198 மணி நேரத்திற்கு பிறகு 18 வயதுள்ள முகமது கபர் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் இருந்து இரண்டு சகோதரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரை உயிருடன் மீட்க முடிந்ததால் மீட்பு குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.