துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 41000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

சர்வதேச நாடுகள் அனுப்பி வைத்த மீட்பு குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் என பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று துருக்கியில் 24 மணி நேரத்திற்கு பின்பு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் மட்டும் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடுப்பாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தாயீப் எர்த்டோகன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் துருக்கி மற்றும் சிரியா இரு நாடுகளுமே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் துருக்கிக்கு மட்டுமே வெளிநாட்டு உதவிகள் குவிந்து வருவதாக சிரியாவில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.