தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு தமிழ்நாட்டுக்கு பயன் பெரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தபடி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த ஏஐ புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்து தமிழகத்தில் டெஸ்லா நிறுவனம் அமைந்தால் அதுதான் முதல்வரின் G.O.A.T நகர்வாக இருக்கும் என்று பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வெங்கட் பிரபு பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
