ஹைதராபாத் நகரில் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு பத்து வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர். சிறிது நேரம் கழித்து சிக்கன் பிரியாணி வந்தது. உடனே பிரியாணியை பகிர்ந்து நண்பர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். பாதி பிரியாணியை சாப்பிட்டு முடித்தனர். அப்போது ஒரு தட்டில் சிகரெட் குச்சி இருந்ததை கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சேர்ந்து மீடியாக்களிடம் தெரிவிப்பதாக வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். உடனே ஹோட்டல் நிர்வாகம் அந்த வாலிபர்களிடம் மன்னிப்பு கேட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.