பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு இரட்டை குழந்தைகள் பிறப்பதை அறிந்திருப்போம். அதேபோன்று ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகள் அல்லது 3,4 குழந்தைகள் கூட ஒன்றாக பிறந்திருப்பதை அறிந்திருப்போம்.ஆனால் தற்போது மிகவும் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் ஒரு குடும்பத்தில் 9 பேர் ஒரே நாளில் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

அதாவது பாகிஸ்தான் நாட்டில் அமீர் அலி கதிஜா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இந்த தம்பதிகளின் 7 குழந்தைகளும் அடுத்தடுத்த வருடங்களில் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் வருடம் தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். மேலும் இதன் காரணமாக இவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.