2026-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது விழாவின் போது ஹாலிவுட் நடிகர் டிமோதி ஷாலமே படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உண்மையில் இது ஒரு போலியான புகைப்படமாகும். இந்த படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2026 ஆஸ்கார் விழாவில் அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என்பதும், பரவி வரும் புகைப்படம் வெறும் வதந்தி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை உற்று நோக்கினால், அதில் உள்ள சில உடல் அமைப்புகள் மற்றும் பின்னணி விவரங்கள் இயற்கைக்கு மாறாக இருப்பதை கவனிக்கலாம்.
🚨 Timothée Chalamet :
Supuestamente se cayó al llegar a la alfombra roja de los Óscar.
😳
Al parecer no sabía bailar ballet.
😬#TioTendencias #Oscars pic.twitter.com/ZzXjzY2zwp— ¿Por qué es tendencia en México? (@TendenciasMX) March 16, 2026
“>
இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் மிகவும் தத்ரூபமாக இருப்பதால், பலரும் இதை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் பொது இடங்களில் விபத்துக்குள்ளாவது போன்ற படங்களை உருவாக்கி வைரலாக்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே, ரசிகர்கள் இதுபோன்ற ஆதாரமற்ற புகைப்படங்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
