ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த “ROAR 26” பிரம்மாண்ட கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களைகட்டப் போகிறது.
இந்த மெகா விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி ஆட்டங்கள், ஜாலியான போட்டிகள் மற்றும் சிஎஸ்கே அணியின் இதுவரையிலான பயணத்தை நினைவுகூரும் சிறப்பு நிகழ்வுகளும் இந்த விழாவில் இடம்பெற உள்ளன.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜாம்பவான் தோனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை நேரில் காணவும், அவர்களின் ஆட்டத்தை ரசிக்கவும் இப்போதே மஞ்சள் படை ரசிகர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.
மார்ச் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த விழாவால் சென்னை மாநகரமே சிஎஸ்கே நிறமான மஞ்சளாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
