2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தொடர் முழுவதும் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களின் சிறப்பான பங்களிப்பும், பும்ராவின் வேகமும் இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.வெற்றிக்குப் பிறகு பேசிய பும்ரா, சவால்களை எதிர்கொண்டு அணியின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவது தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மருந்தாக, தற்போது அதே மண்ணில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். தனது தாய் மற்றும் மகன் முன்னிலையில் இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றதை ஒரு மறக்க முடியாத தருணம் என அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.