கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஆஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் 31-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் குழந்தை பிறந்த செய்தியை கேட்டு சுகாதாரப் பணியாளர்கள், அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்பொழுது அங்கு குழந்தை இல்லை, எங்கே என்று கேட்டபோது குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுத்து விட்டதாக ஆஷா கூறினார். இதுகுறித்து  சுகாதாரத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையின ஆஷாவிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்து கொன்று, கழிவறையில் புதைத்து தெரியவந்தது. இதற்கு இவரது நண்பரான ரதீஸ்(38) என்பவர் உதவியுள்ளார். அவரது வீட்டின் கழிவறையில் தான் ஆஷாவின் குழந்தையை புதைத்துள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்பு புதைத்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் ஆஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.