அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 -2021 வரை 10 வருடங்களில் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு எனில் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழ்நாடு மக்கள் குடிக்க பால் இன்றி அல்லலுறும் அவல நிலையை இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் உபபொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு OPS கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.