சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு அக்டோபர் 15 முதல் 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

அதே சமயம் நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பதால் இதில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்தையும் வருகைக்கான தேதியை உள்ளிட்டு “[email protected]”என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.