சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், “கட்சித் தலைவர் திருமாவளவன் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். நேற்று கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், தலைவரின் அறிவுரைக்காகத் தொண்டர்கள் காத்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மக்களாட்சியை மட்டுமே விசிக ஆதரிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவிகளை விசிக கோருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அது குறித்து எனக்குத் தெரியவில்லை; அது தொடர்பாகத் தலைவர் திருமாவளவன் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
