“தாய்க்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமே இல்லை” என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், எதிர்பாராதவிதமாக நீரோட்டத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கத் தொடங்கினான். இதைக் கண்டதும் ஒரு நொடி கூட யோசிக்காத அவனது தாய், தனக்கு நீச்சல் தெரியுமா அல்லது ஆழம் எவ்வளவு என்பது பற்றி கவலைப்படாமல், தன் உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் குதித்தார்.

மேலும் “கடைசியில் தாயின் இதயம் தாய்தான்” என்று மராத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, தன் சேயைக் காக்க அந்தத் தாய் காட்டிய வேகம் மற்றும் துணிச்சல் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தக் காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்தத் தாயின் தியாகத்தைப் பாராட்டி வருகின்றனர்.

“>

இதனால் “இப்படிப்பட்ட ஒரு தாயைக் கடவுள் கொடுத்தது அந்த குழந்தையின் வரம்” என்றும், “உலகில் உண்மையான தெய்வம் தாய் மட்டுமே” என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மரணத்தின் விளிம்பிலிருந்து தன் குழந்தையை மீட்டெடுத்த அந்தத் தாயின் பாசம், தாய்மை என்பது வெறும் சொல் அல்ல, அது ஒரு மகாசக்தி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது.