ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்கு பகுதியில் இருந்து கெப்பி மாகாணத்தில் இருக்கும் சந்தை பகுதிக்கு நைஜர் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் அளவுக்கு அதிகமான ஆள்களும் சுமைகளும் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் வேகமாக காற்று அடிக்க அதை தாங்காத படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதனால் படைகில் பயணித்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 100 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.