கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் அப்பகுதியில் வியாபாரமும் களைகட்டியுள்ளது.