நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி நேற்று பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது ரூ. 1 1/2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.‌ இந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்து செல்லப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் சமயத்தில் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.