இந்தோனேசியாவில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட சோகமும், அவருக்குக் கிடைத்த உதவியும் தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்ச உருக்கும் செய்தியாக வைரலாகி வருகிறது.
அந்தப் பெண் மிகுந்த சிரமப்பட்டு ஆர்டர் எடுத்த ஒரு விலை உயர்ந்த பொருளை, டெலிவரி செய்யும் நேரத்தில் வாடிக்கையாளர் வாங்க மறுத்துத் திருப்பியனுப்பியுள்ளார். இதனால் தான் உழைத்த உழைப்பும், பணமும் வீணாகிவிட்டதே என்ற வேதனையில் அந்த இளம்பெண் தெருவில் நின்று கதறி அழுதுள்ளார்.
அந்தச் சமயம் அவ்வழியே வந்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவருக்கு ஆறுதல் கூறி உதவியது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. கஷ்டப்படும் ஒரு பெண்ணுக்குத் தெரியாத நபர் ஒருவர் காட்டிய இந்த மனிதாபிமானம், “நல்லவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்” எனப் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
An Indonesian girl works as an online salesperson.
One of her customers ordered an expensive item, but when it was delivered, he refused to accept it! 😳
But a man saw her on the street, asked her why she was crying, and then comforted her.❤️ pic.twitter.com/M3cwZOwPVg
— Middle East News (@MiddleEast_Eng) April 24, 2026
“>
