தவெகவின் உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள தமிழகவெற்றி கழகம்  தலைவர் விஜய், அதற்கான நடவடிக்கையாக கடந்த ஜூலை 30-ம் தேதி ‘MY TVK’ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலி மூலம் மக்கள் தவெகவில் நேரடியாக இணைய முடியும் என்ற வகையில் டிஜிட்டல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக வெறும் 2 நாட்களில் 3 லட்சம் பேர் செயலியின் வாயிலாக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

1 நொடிக்கு 18,000 பேர் வரை இணைக்க முடியும் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வலிமையுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் 2 கோடி உறுப்பினர் இலக்கு மிக விரைவில் நிறைவேறும் என பொது மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.