இந்தியாவில் பெண் குழந்தைப் பிறப்பிற்கு எதிரான பழமையான பாகுபாடுகள் இன்னும் சில பகுதிகளில் நீடிக்கின்றன. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தால், சிலர் பெண் குழந்தைகளை ஒதுக்கி விடுவதோடு, கொடூரமாக கருக்கலைப்பு அல்லது பிறந்த பிறகு கொலை செய்யும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த ஆச்கி தேவி (22), ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்த அவர், 17 நாட்கள் மட்டுமே ஆன தனது குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு அதன் மூடியை மூடியுள்ளார். இதனால் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அவருடைய கணவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, ஆச்கி தேவி மீது கொலை வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.