தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொபைல் ஆப் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வருகைப் பதிவு (NMMS Attendance) செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு, மொபைல் ஆப்பில் ஃபேஸ் அத்தென்டிகேஷன் (Face Authentication) மூலம் ஆன்லைனில் வருகைப் பதிவு செய்ய முயன்றபோது, அவரது முகத்தை ஆப் சரியாக அடையாளம் காண முடியாமல் தொழில்நுட்பப் பிரச்சனையால் நீண்ட நேரமாகத் தவித்து அவதிப்பட்டு வந்துள்ளார்.
“Modern Problem Require Modern Solutions”
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் NMMS வருகை பதிவு ஆப்பில் டெக்னாலஜி பிரச்சனையால் அவதிப்பட்ட தொழிலாளி ஒருவருக்கு தலைமுடியை தலையில் போட்டு உதவிய பெண்.#Telangana #Hair #NMMS #ViralWatch #Oneindia… pic.twitter.com/NN5FBD55VD— Oneindia Tamil (@thatsTamil) May 29, 2026
இதைக் கவனித்த சக பெண் தொழிலாளி ஒருவர், “மாடர்ன் பிரச்சனைகளுக்கு மாடர்ன் தீர்வுகள் தேவை” (Modern Problems Require Modern Solutions) என்ற பாணியில், சற்றும் யோசிக்காமல் தனது தலைமுடியை அந்தத் தொழிலாளியின் தலையில் முன்பக்கமாகப் போட்டு, ஆப் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சூப்பர் ஐடியாவைச் செய்து அசத்தலாக உதவி செய்துள்ளார்.
ஆப் தொழில்நுட்பக் கோளாறால் வேலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த தொழிலாளிக்கு, சமயோசிதமாக யோசித்துத் தனது தலைமுடி மூலம் உதவி செய்த அந்தப் பெண்ணின் அக்மார்க் கிராமத்து மாஸ் டெக்னிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
