டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா அவர்கள் பயன்படுத்தும் நவீன ‘ஹை-டெக்’ நாற்காலி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் இடம்பெற்றிருந்த இந்த ஆடம்பர நாற்காலியில், ‘ஜீரோ கிராவிட்டி’ வசதி, உடல் சோர்வை நீக்கும் தானியங்கி மசாஜ் வசதி, மற்றும் உயர்தரத் தோல் அமைப்பு போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன.
மேலும் நீண்ட நேரம் அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகுந்த வசதியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நாற்காலியின் பயன்பாடு இணையத்தில் பலத்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நாற்காலியின் விலை சுமார் 60,000 ரூபாய் முதல் 1,10,000 ரூபாய் வரை இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சாதாரண நாற்காலிகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் நிலையில், இத்தகைய விலையுயர்ந்த ஆடம்பர நாற்காலியை முதலமைச்சர் பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது என பலர் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
