தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார். இதனால் நடிகை அனுஷ்காவுக்ககென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதன் பிறகு நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்காவின் உடல் எடை குறையவில்லை. இவர் பிரபாஸ் உடன் சேர்ந்து நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்காவுக்கு போதிய பட வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அனுஷ்காவின் புகைப்படம் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அனுஷ்கா ஆண்ட்டி மாதிரி இருக்கிறார். அவர் உடல் எடையை குறைப்பதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.