சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேரம் கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஆகிய நாடுகளை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா படைக்கும்.

இந்நிலையில் இந்த விண்கலம் சூரியனில் இறங்காது அதாவது சூரியனை நெருங்காது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புற மண்டலத்தையே இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பூமியிலிருந்து தோராயமாக 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனவும் அதன் எடை 1475 கிலோ எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.