பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்களை அரசு செய்து வருகிறது. அதனால் மாதத்தின் தொடக்கத்தில் அரசு விதித்துள்ள உத்தரவுகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் தொடங்கியுள்ள நிலையில் மாதத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மற்றும் மக்கள் கவனித்து செயல்பட வேண்டியவற்றை குறித்து இதில் பார்க்கலாம்.

மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி உடன் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு அறிமுகம் செய்துள்ள சிறப்பு FD திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிப்பதற்காக கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஐடிபிஐ வங்கி 375 நாட்களுக்கான ஒரு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் இதில் பொதுமக்கள் 7.10 சதவீதம் லாபமும் மூத்த குடிமக்கள் 7.60 சதவீத லாபமும் பெற முடியும்.

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான இறுதி கட்ட கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி உடல் முடிவடைகிறது. அதன் பிறகு ஆதாருடன் இணைக்காத பட்சத்தில் உங்களின் பான் கார்டு செயலிழந்து விடும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 10 வருடங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி உடன் இதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 158 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.