தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பாதுதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான கண்காணிப்பு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திராவிட மலர் ஆட்சி எனவும் சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.