இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கைவிரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கைவிரல் ரேகை இல்லாதவர்களுக்கு கண் கருவிழி பதிவு மூலமாக ஆதார் அட்டை வழங்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜுவ் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கண் கருவிழி பதிவு மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகிய இரண்டுமே இல்லாத நபர்களுக்கு எந்த ரேகையும் பதிவு செய்யாமல் ஆதார் அட்டையினை பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கொண்டு ஆதார் அட்டை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த வகையான மக்களுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பட்சத்தில் ஆதார் வழங்கும் அதிகாரி அரசியல் வழிகாட்டுதல்களை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது