ஒடிசாவின் பாலங்கிரில் உள்ள ஓவோ பண்ணை, முட்டை துறையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் பண்ணையாக மாறியுள்ளது. ‘கென்கோ’ பிராண்டின் கீழ், பண்ணை வாடிக்கையாளர்களுக்கு முட்டை பாக்கெட்டுகளில் QR குறியீடுகள் மூலம் தயாரிப்பு குறித்த தரமான தகவல்களை வழங்கப்படுகிறது.  இது மொபைல் ஸ்கேனிங் மூலம் எளிதாக அணுக உதவுகிறது.

கென்கோ முட்டைகள் பல்வேறு நகரங்களில் கிடைக்கின்றன. அவை விற்பனை நிலையங்கள் மற்றும் புதுமையான ‘முட்டை-ஸ்ட்ரா’ மூலம் விநியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முட்டை தொகுப்பிலும் உற்பத்தி தேதி அடங்கும். இது நுகர்வோர் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துகிறது. மிஸ்ரா சகோதரர்களால் நிறுவப்பட்ட வேளாண் சார்ந்த இந்நிறுவனமானது இப்போது கிழக்கு இந்தியாவில் ஒரு பெரிய முட்டை உற்பத்தியாளராக உள்ளது.

தினசரி 10 லட்சம் முட்டைகள் விநியோகிப்படுகின்றன. இதன்மூலம் பாலங்கீர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ததுடன், குறிப்பாக பண்ணையைச் சுற்றி வசிக்கும் ஆதரவற்ற மற்றும் உதவியற்ற மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு முறை இலவச சத்தான உணவு வழங்கவும் வழிவகுத்துள்ளது.