ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் அட்டை பெற கைரேகை இல்லாதவர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி வழங்கியுள்ளது.

கைரேகை இல்லாதவர்கள் ஐரிஸ் ஸ்கேன் (கண் கருவிழி) மூலம் ஆதார் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கைரேகை இல்லாததால் ஆதார் பெற முடியாதவர்கள் ஐரிஸ் ஸ்கேன் மூலம் ஆதார் அட்டை பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆதார் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.