புதுச்சேரி மாநிலத்தின் எந்த வங்கி பெயரிலும் தனிப்பட்ட கைபேசியில் இருந்தும் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும், இல்லையென்றால் நெட் பேங்கிங் பண பரிவர்த்தனை முடக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அல்லது செயலியை அனுப்பினால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி குற்றச்சடுப்பு பிரிவு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில் கேட்கப்படும் ஓடிபி எண் மற்றும் பிறந்த தேதி போன்ற கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டாம் எனவும் இது போன்ற தகவல்களை நம்பி பணம் செலுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு வங்கி நிர்வாகத்தினரும் தனிப்பட்ட விவரங்களை எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களின் தொலைபேசி மூலமாக கேட்க மாட்டார்கள். அதனைப் போலவே ஏதாவது குறுஞ்செய்தி அல்லது செயலி வந்தால் அது இணைய வழி மோசடி கும்பலின் வேலை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.