ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான நாடாளுமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 3 தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். மனுதாரர்களின் வாதங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் இந்த முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.