
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதில் உள்ள தனிநபரின் தகவல்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பல்வேறு அரசு சேவைகளுக்கான அடிப்படை ஆவணமாக ஆதார் உள்ள நிலையில் வங்கி கணக்கு மற்றும் சிம்கார்டு வாங்குதல் போன்றவற்றுக்கும் ஆதார் சரிபார்ப்பு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதார் கார்டில் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை நாம் பலமுறை மாற்ற முடியும். ஆனால் சில தகவல்களை விரும்பப்படி மாற்ற முடியாது. அதாவது பிறந்த தேதியை பலமுறை மாற்ற முடியாது. ஒரு முறைக்கு மேல் மாற்ற முடியாத மற்றொரு விஷயம் ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர். இதனால் சரியான ஆவணங்களை கொடுத்து குழந்தைகளுக்கு முதல் முறை ஆதார் எடுக்கும் போதே கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.