
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை ஏமாற்றி வந்த பெண் ஒருவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட சுரபி குப்தா என்ற 32 வயது பெண் லண்டனில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக பம்பில் என்ற டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை குறி வைத்து இவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 10 பேரை ஏமாற்றி 30 லட்சத்திற்கும் மேற்கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரது கூட்டாளிகள் இருவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரி நடத்தி வருகிறார்கள்.