தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியதில், நடிகர் விஜயின் எதிர்வரும் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்தார். “எதிர்கால தமிழகத்தின் இளைஞர் எழுச்சி நாயகனாக திகழும் விஜய், மக்கள் எழுச்சியுடன் புதிய எதிர்காலத்தை உருவாக்கப் போகிறார். வரும் 16ஆம் தேதி அவர் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வாரி மஹால் அருகே உள்ள தனியார் இடம் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.

அனுமதி கிடைத்தவுடன் தேவையான பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்றும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த தவெக நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதாகவும் அவர் கூறினார். ரோடு ஷோ  தவிர்க்கப்பட்டு, தனியார் இடத்திலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், “மக்கள் சக்தியே விஜயை அரியணையில் அமர்த்தும். மூத்த தலைவர் என்பதால் பிற கட்சிகள் குறித்து பேசுவது பொருத்தமல்ல” என்றும் அவர் கூறினார்.