கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, கழகம் அவர்களுக்கு எப்போதும் துணையாக நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற இந்த 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல் மற்றும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் என 30-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச்சம்பவங்கள் அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, இனிமேல் இது போன்ற கொடூரங்கள் நிகழாமல் தடுக்க, முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கிற்கு முதலிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 23, 2026
“>
