பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ராஞ்சனா எனும் இந்தி திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இப்படத்தை தமிழிலும் வெளியிட்டனர். இந்தி நடிகர் அனில்கபூரின் மகள் சோனம் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கிடையில் சோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு வாயு என்ற ஆண்குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பின்பும் சோனம் கபூர் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோனம் கபூர் மும்பையில் இருக்கும் தனது 5 ஆயிரத்து 533 சதுர அடி கொண்ட ஆடம்பர வீட்டை விற்றுள்ளார். இந்த வீடு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் அமைந்திருக்கிறது. இதனை 2015ல் சோனம் கபூர் வாங்கினார். இப்போது இந்த வீட்டை ரூபாய்.32 கோடிக்கு விலை பேசி விற்றிருக்கிறார்.