தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரையொருவர் விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் மக்களை ஈர்க்க பிரத்யேக பரப்புரை வீடியோவை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

அப்படி திமுக கட்சி சார்பில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள “ஆஜாகா ஈஜாகா ஊஜாகா” என்ற பரப்புரை பாடல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.