தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு விண்ணப்பத்தில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களையும் சேர்த்து இறுதியாக  ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பணத்தை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழா ஒன்றில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பெண் ஒருவர் தனக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று கூறினார். அதன் பிறகு அமைச்சர் அதிகாரிகளை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் விவரத்தை தெரிவித்து தேர்தலுக்குப் பிறகு அவருடைய பெயரை உரிமை தொகையை திட்டத்தில் எனக்கு வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.