ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தஹிபாரா(தயிர்வடை) என்ற உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் விற்பனையாளர் ஒருவரிடம் ‘கட்டாக் தஹிபாரா’ வாங்கிச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, பலருக்குத் தொடர் வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.