டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர், நவம்பர் 18 அன்று மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சாகும் முடிவை எடுப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, அதே ரிக்‌ஷாவில் பயணித்த ஒரு பெண்ணிடம் அந்த மாணவன் அழுதுகொண்டே பேசியுள்ளார். “உங்கள் மகனைப் பள்ளியில் இருந்து நிறுத்திவிடுங்கள். என்று கூறியதுடன்..,

ஆசிரியர்கள் என்னைத் தாங்க முடியாத அளவுக்குத் துன்புறுத்துகிறார்கள். பெற்றோரை அடிக்கடிப் பள்ளிக்கு அழைக்கிறார்கள்” என்றும் கூறி, மாணவன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மாணவன் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்திலும், ஆசிரியர்கள் கொடுத்த தொல்லைகள் குறித்துக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

டெல்லி அரசு உடனே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. மேலும், அந்தத் தனியார் பள்ளி நான்கு ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படும் என டெல்லி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.