ஒடிசாவில் கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற தன்னார்வலர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அரசு உடல் ஊனமுற்ற கல்வி தன்னார்வலர்கள், பன்மொழி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆரம்பக் கல்விகளில் பணியாற்றும் கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி தன்னார்வலர்களின் சம்பளம் 5379 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்காலிக கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு 7000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியத்தை தவிர பத்து மாதங்களுக்கு பதிலாக இனி 12 மாதங்களுக்கான ஊதியங்களையும் ஆசிரியர்கள் பெறுவார்கள் எனவும் அறிவித்துள்ளது. இனி 30 பாட வேலைகளை ஆசிரியர்கள் எடுப்பார்கள் என அரசு தெரிவித்துள்ளது.