ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு தந்தை சுரங்க வெல்லாலகே (மாரடைப்பு காரணமாக) மரண செய்தி தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி அணியின் கேப்டனாக விளங்கிய சுரங்கா, இலங்கை பள்ளி கிரிக்கெட்டில் ஒரு மதிப்புக்குரிய வீரராக இருந்ததாக முன்னாள் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் அர்னால்ட் தெரிவித்தார். துனித்தை ஆறுதல் கூறும் புகைப்படங்களும் வெளிவந்த நிலையில், அணியின் கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெற்றன.
The moment when Sri Lanka’s coach Sanath Jayasuriya and Team manager informed Dunith Wellallage about the demise of his father right after the match. Dunith’s father passed away due to a sudden heart attack. He was 54.🥲
video credits- Dhanushka pic.twitter.com/P01nFFWlVW— Nibraz Ramzan (@nibraz88cricket) September 18, 2025
“>
ஆப்கானிஸ்தானை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதியடைந்த இலங்கை அணிக்கு இது மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணமாக அமைந்தது. குசால் மெண்டிஸ் 74 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 28 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், இறுதி ஓவரில் முகமது நபி துனித் பந்தில் ஐந்து சிக்ஸர்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், இலங்கை 170 ரன்கள் இலக்கை எளிதில் வென்றது.
The moment when Mohamed Nabi was informed about the sudden demise of Dunith Wellalage’s father. Mohamed Nabi hit 5 sixes of Dunith Wellalage’s bowling in the last over of Afghanistan’s innings. pic.twitter.com/sjfAUzQvE6
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 18, 2025
“>
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை எதிர்கொள்ளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாகவே, துனித்தின் தந்தை மரணம் அணியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
