உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில், அங்கு பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் அனைவரும் அதிரடியாகக் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆன்மீக வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலின் இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் எனப் பொறுப்பில் இருந்த முக்கிய உயர் அதிகாரிகள் அனைவரும் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், அவர் ஆய்வு செய்த சில நாட்களிலேயே அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலின் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், பக்தர்களுக்கான வசதிகளை முறைப்படுத்தவும் இந்த அதிரடி ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வேளையில், இந்த அதிரடி இடமாற்ற உத்தரவு ஒட்டுமொத்த கோவில் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.