முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறும் போது அங்கிருந்த விமான நிறுவன ஊழியர் ஒருவர் அவர்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி போன்ற பிரபலங்கள் பொதுவெளியில் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவர்களின் தனிமனித சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

“>

இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரபலம் அல்லது சாதாரண பயணி யாராக இருந்தாலும், அவர்களின் அனுமதியின்றி பணியில் இருக்கும் விமான ஊழியர்கள் இப்படி ரகசியமாக வீடியோ எடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இது ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்றும் மக்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலும், சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் மீது விமான நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.