பிக் பாஸ் 17 புகழ் இஷா மாளவியாவின் ‘ஷேக்கி-ஷேக்கி’ பாடல் தற்போது சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் பாடலுக்கு தெரு வியாபாரி ஒருவரின் அசத்தலான நடன வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. தோசை மற்றும் வறுத்த மீன் சாதம் விற்பனை செய்யும் சாலையோரக் கடை உரிமையாளர் சுரேஷ் ஆர், சமூக ஊடகங்களில் ‘தல்லுவண்டி சுரேஷ்’ என்ற பெயரில் பிரபலமானவர்.

சமீபத்தில் வெளியான அவரது புதிய வீடியோவில், ‘ஷேக்கி-ஷேக்கி’ பாடலில் இஷா மாளவியாவின் அசைவுகளை மிகச் சரியாகவும், முகபாவனைகளுடன் கலக்கியும் அவர் ஆடியுள்ளார். ஜூலை 5ஆம் தேதி @sure.shr1980 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 7 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. கருத்துப் பகுதியில், “நம்பர் ஒன் அங்கிள்”, “சூப்பர் டான்ஸ் அங்கிள்”, “அங்கிள் நஹி, ஃபயர் ஹை ஃபயர்” போன்ற பாராட்டுகள் பொழிகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Suresh R (@sure.shr1980)

“>

“திறமைக்கு அறிமுகம் தேவையில்லை என்பதற்கு சுரேஷ் அண்ணா சான்று” என்று பலரும் கருத்து தெரிவிக்க, இந்த வீடியோவை பார்த்த பிறகு அவரின் ரசிகராக மாறாமல் இருக்க முடியாது என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.