புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கான எந்த ஒரு திட்டங்களும் இடம்பெறவில்லை. புதுச்சேரியை புறக்கணிக்க கூடிய இந்த பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என்று முதல்வர் ரங்கசாமி பாராட்டியுள்ளார். ஒருவேளை மத்திய பட்ஜெட்டை அவர் விமர்சித்தால் மறுநாள் அவருக்கு முதல்வர் நாற்காலி இருக்காது என்ற பயத்தால் தான் பட்ஜெட்டை அவர் வரவேற்றுள்ளார்.

புதுச்சேரியில் பத்திரப்பதிவுத்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டியதில் கூட ஊழல் நடந்துள்ளது. வெளிப்படையாகவே லஞ்சம் வேண்டும் என கேட்கிறார்கள். புதுச்சேரியில் தற்போது ஊழல் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தான். முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.