லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத் லியோ திரைப்படம் பற்றியும் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது, லியோ திரைப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிகவும் அற்புதமானது ஆகும். லோகேஷ் கனகராஜ் என் மகன் மாதிரி. தளபதி விஜய் உடனும் படக்குழுவினருடனும் நல்ல உறவை பகிர்ந்துக்கொண்டேன் என சஞ்சய் தத் கூறியுள்ளார்.