லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 19 ஆம் தேதியன்று பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் திரையரங்குகளில் வெளியானது.  கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசிய லோகேஷ் கனகராஜ், ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் இப்பட வெற்றிக்காக என்ன பரிசு வேண்டும் என்று கேட்டால் ஹெலிகாப்டர் வேணும் என்று சொல்வேன் என தெரிவித்துள்ளார்.