கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த உள்ளூர் போட்டி எங்கு நடைபெற்றது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோவில் இடம்பெறும் விசித்திரமான காட்சி பலரையும் நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு பேட்ஸ்மேன், பவுலர் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் உயரமாக தூக்கி அடிக்கிறார்.
துரதிஷ்டவசமாக அந்த பந்து நேராக ஆகாசத்தில் உயர, அதனை அந்த பவுலரே கேட்ச் பிடிக்க முனைகிறார். ஆனால் அதே நேரத்தில், பேட்ஸ்மேன் கோபத்தில் தனது பேட்டை தரையில் அடித்ததும் , பேட் உடைந்து அதன் ஒரு பகுதி நேராக ஸ்டம்ப்ஸை தாக்குகிறது. இதுமாதிரியான அவுட் விசித்திரமானது தான்..
🚨 FIRST TIME IN CRICKET 🚨
– A batter did something that ends up in benefiting bowling team 🤣
– Top edge, broken bat, hit wicket, catch drop, moye moye moment 😅
– A Must Watch Video 😂 pic.twitter.com/HGOwZDJU2R
— Richard Kettleborough (@RichKettle07) August 26, 2025
“>
இந்த அதிரடியான காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்கள் பலர் அதில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “விளையாட்டில் நிதானமும் பொறுமையும் அவசியம்,” என்ற கருத்துகள் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஒரு சிறிய தவறே பெரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கே இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது எனவும் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. உண்மையில் விளையாட்டில் உணர்ச்சி வசப்படாமல், அமைதியுடன் செயல்பட வேண்டும் என்பதையே இந்த வைரல் வீடியோ உணர்த்துகிறது.
