
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது ஓட்டுக்கு காசு குடுப்பாங்க அதை வாங்கிட்டு எனக்கே ஒட்டு போடுங்க என்று சீமான் அண்ணாதுரை போல் பேசி காட்டியுள்ளார்.
அவர் பேசியதாவது, ஜனநாயகத்தில் இருக்கிற கடைசி வாய்ப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது .மதிப்புமிக்க உரிமை வாக்கு. இந்திய அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். எங்கள் அண்ணன் சொல்கிறார் காங்கிரஸ் ஆட்சியிலே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று. அதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுகின்ற பொழுது,” இந்த காங்கிரசார் ஓட்டுக்கு காசு கொடுப்பாரே அந்த காசை வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று ஏழு கடல் ஆண்டு ஏழுமலை தாண்டி இருக்கிற வெங்கடாசலபதியை அழைத்துக் கொண்டு வந்து அந்த படத்தில் அடித்து சத்தியமா வாங்குவானே இந்த காங்கிரஸ்காரர் என்று அன்று பேரறிஞர் அண்ணா பேசியிருக்கிறார்.
அந்த காங்கிரஸ் காரருக்கும் சேர்த்து ஓட்டுக்கு 5000 கொடுக்கிற வேலையை அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துகிறவர்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த திராவிடம். அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கட்சி நடத்துபவர்கள் தான். அந்த பேரறிஞர் அண்ணா சொல்கிறார் தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? மதிப்பு மிக்க தங்கத்தை தவிட்டுற்கு வாங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவது தான்.
அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி தான். அம்பேத்கர் அவர்கள் அன்றைக்கே மதிப்பு மிக்க நம் உரிமைகளை( வாக்கை) சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது என்பது அவமானமானது என்று உறுதி செய்தார். ஆனால் அன்றைக்கே ஓட்டுக்கு காசு கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் .முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி. அந்த காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவன் தேசத் துரோகி என்று சொன்னார். மாண்புமிக்க ஜனநாயகத்தை கேடுகெட்ட பணநாயகத்திற்கு அடமானம் வைப்பது என்பது போராடி விடுதலை பெற்று தந்த நம்முடைய முன்னோர்களின் உழைப்பை நாம் அவமதிப்பதற்கு சமம் ஆகிவிடும். எனவே அறிவார்ந்த பெருமக்களே நீங்க ஆழ்ந்து சிந்தித்து யோசித்து வாக்கு செலுத்த வேண்டிய வரலாற்று காலம் என்பது நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.