தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.  மாநாட்டில் விஜய் அவர்கள் அரசியல் சார்ந்து  பல கருத்துக்களை முன் வைத்திருந்தாலும், பலரும் அதற்கு ஆதரவாகவும் சிலர் அதற்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் அவர்கள் பேசியது சினிமா சூட்டிங் பானியில் இருந்ததாகவும், அது மற்றுமொரு படப்பிடிப்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்துள்ளது என்ற விமர்சனங்கள் பொதுவாக எழுந்து வருகிறது.

அதற்கு ஏற்றார் போல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், திருமலை படத்தில் விஜய் அவர்கள் பேசக்கூடிய வசனம் ஒன்றை அப்படியே மேடையில் அவர் பேசியுள்ளதாக கூறப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், இந்த பயாஸ்கோப் காட்டுவது இதெல்லாம் என்கிட்ட வேண்டாம். அப்படின்னு திருமலை படத்தில் அவர் வசனம் ஒன்றே பேசியிருப்பார். அதே வசனம் அப்படியே மாநாட்டில் பேசியிருப்பதாக அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meme Viber (@meme_viber_007)